திருச்சி: வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் ரூ.4.53 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
 | 

திருச்சி: வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்!

திருச்சி  விமான நிலையத்தில் ரூ.4.53 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

திருச்சியில் இருந்து சார்ஜா செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அரியலூரை சேர்ந்த முகமது அசாருதீன் (வயது 22) என்பவர் தனது கைப்பையில் கனடா டாலர்ஸ், சுவிஸ் பிரான்க், யூரோ உள்ளிட்ட ரூ.4.53 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP