நெல்லை, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 | 

நெல்லை, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

சென்னையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், சென்னையிலிருந்து நெல்லை மற்றும் செங்கோட்டை செல்லும் ரயில்கள் அக்.10 முதல் டிசம் 7 வரை எழும்பூரில் இருந்து புறப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், சென்னை - நெல்லை (12631) எக்ஸ்பிரஸ் மற்றும், சென்னை - செங்கோட்டை (12661) ஆகிய ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் என்றும், நெல்லை - சென்னை (12632), செங்கோட்டை - சென்னை (12662) ஆகிய ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP