சென்னையில் போக்குவரத்து மாற்றம்! வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
 | 

சென்னையில் போக்குவரத்து மாற்றம்! வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஜெ நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இதனால் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஜெயலலிதா நினைவிடத்தின் வடக்கிலிருந்து வரும் வாகனங்கள், போர் நினைவுச்சின்னம் சந்திப்பிலிருந்து கொடிமரச்சாலை, அண்ணா சாலை வழியே செல்ல வேண்டும் என்றும், முத்துசாமி பாயின்டிலிருந்து வரும் வாகனங்கள், கொடிமரச் சாலைக்கு செல்லாமல் அண்ணா சாலை வழியாகவும், நேப்பியர் பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் ஆடம்ஸ் பாயின்டில் திருப்பப்பட்டு சுவாமி சிவானந்த சாலை வழியே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தெற்கிலிருந்து வரும் வாகனங்கள் காந்தி சிலை சந்திப்பிலும் செல்லவேண்டும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP