மாமல்லபுரத்தில் சுற்றுலா தளங்கள் மூடல்!

சீன அதிபர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன.
 | 

மாமல்லபுரத்தில் சுற்றுலா தளங்கள் மூடல்!

சீன அதிபர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன. 

பிரதமர் நரேந்திரமோடியின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜீ ஜின் பிங் வரும் 11ஆம் தேதி சென்னை வரவுள்ளார். அவரை வரவேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியும் சென்னை வருகிறார். இதை தொடர்ந்து இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் சிற்ப கலைகளை பார்வையிட்டு, புகைப்படங்கள் எடுத்துகொள்கின்றனர். மேலும், இருநாட்டு நல்லுறவு குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. புது பொழிவுடன் காணப்படும் மாமல்லபுரத்திற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் செல்ல இன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக  ஐந்துரதம், கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன. தலைவர்கள் வருகை நிறைவடைந்தவுடன் பொதுமக்கள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP