பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்து, காப்பற்ற வேண்டும்; திருச்சி சிவா

பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்து மக்கள் அதை காப்பாற்ற வேண்டும் என திருச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் சிவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 | 

பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்து, காப்பற்ற வேண்டும்; திருச்சி சிவா

பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்து மக்கள் அதை காப்பாற்ற வேண்டும் என திருச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் சிவா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

திருச்சி மாநகரில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் பொதுமேலாளர் வி.ராஜு ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4 ஜி சேவை தருவது  மகிழ்ச்சியளிப்பதாகவும், அதற்கு காரணம் 100% நான் பொதுத்துறை நிறுவனங்களின் ஆதரவாளன் என்றும் கூறினார். 

மேலும், பி.எஸ்.என்.எல் ஒரு விவசாயியை போல, இது ஊருக்கு உதவக்கூடியது, தனக்கு என்று எதுவும் வைத்து கொள்ளாது. பொதுத்துறை நிறுவனங்கள் சேவையை முன்னிறுத்தி இயங்குகிறது, இலாபத்தை முன்னிறுத்தி இயங்குவது இல்லை. பி.எஸ்.என்.எல் சேவையில் ஏதேனும் குறைப்பாடு இருந்தால் நேரடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதை சரி செய்ய கூறலாம். ஆனால் தனியார் தொலைத்தொடர்பு சேவையில் அவ்வாறு கோரிக்கை வைக்க முடியாது

பணிப்பாதுகாப்பு என்பது அரசு பணிகளில் தான் உள்ளது. அரசுப்பணியில் தான் இட ஒதுக்கீடு உள்ளது. தனியார் துறையில் இட ஒதுக்கீடு இல்லை பொதுத்துறை நிறுவனங்களில் கிடைக்கும் இலாபம் மக்களுக்கு சென்று சேரும். பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்து மக்கள் அதை தயவு செய்து காப்பாற்ற வேண்டும்

4 ஜி சேவை அனைத்து கிராமப்புறங்களிலும் கிடைக்க வேண்டும், புயல்,வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தான் சேவையை தந்தது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மக்கள் ஊக்கம் தர வேண்டும். பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தனியார்மயமாக்க விட மாட்டோம் என்ற எண்ணத்தில் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP