திருப்பதி பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவடைகிறது.
 | 

திருப்பதி பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவடைகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம், கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், மலையப்ப சாமி தாயார்களுடன் எழுந்தருளி நாள்தோறும் ஒவ்வொரு விதமான வாகனங்களில் வீதி உலா வந்தார். பெரிய சேஷம், சிறிய சேஷம், அன்ன, கற்பக விருட்ச, கருட, சிம்ம, அனுமந்த வாகனம் என விதவிதமான வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு மலையப்ப சாமியை தரிசனம் செய்தனர். வீதி உலாக்களின்போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

திருப்பதி பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவு

விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை கடந்த 4ஆம் தேதியும், தேரோட்டம் 7ஆம் தேதியும் நடைபெற்றது. கடைசி நாளான இன்று அதிகாலை, உற்சவ மூர்த்திகளும், சக்கரத்தாழ்வாரும் வராக சுவாமி கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். வராக சுவாமி கோயில் எதிரே மலையப்ப சுவாமிக்கும், தாயார்களுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களை கொண்டு திருமஞ்சனமும், கோயில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும் நடைபெற்றது.

இதையடுத்து, இரவு 7 மணிக்கு, பிரம்மோற்சவத்தை காணவந்த தேவதைகளை வழியனுப்பி வைக்கும் விதமாக ஆகம விதிப்படி வேத மந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக் கொடி இறக்கப்பட்டு, பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP