திருச்சி: கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையம் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
 | 

திருச்சி: கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

திருச்சி துறையூர் அருகே முத்தையம்பாளையம் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூருக்கு அருகே முத்தையம்பாளையம் கருப்பணசாமி கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கு சித்ரா பவுர்ணமியையொட்டி, படிகாசு வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இதையடுத்து ஒருபக்கமாக மக்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றதில், 4 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

உயிரிழந்தவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP