தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," வெப்பச்சலனம் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தென் தமிழகம் மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 3செ.மீ மழை பதிவாகி உள்ளது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மிதமான மழை பதிவாகி வருகிறது.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்  இருக்கும், அதிகப்பட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP