துறையூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதி: முதலமைச்சர்

திருச்சி துறையூர் விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு தொகை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
 | 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நேற்று மாலை மினி சரக்கு ஆட்டோ ஒன்றில் 22 பேர் பயணம் செய்தனர். அப்போது, எஸ்.என்.புதூர் அருகே வந்தபோது ஆட்டோவின் டயர் திடீரென வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ அருகில் இருந்த 30 அடி கிணற்றிற்குள் விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடுதொகை வழங்கவும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரமும் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP