தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு;மீனவர்களுக்கு எச்சரிக்கை 

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு;மீனவர்களுக்கு எச்சரிக்கை 

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே பகுதியில் நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடல் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரம், மாலத்தீவு ஆகிய பகுதிகளுக்கு மீனவர்களு அடுத்த 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP