நீட் தேர்வை கொண்டு வந்ததே இவங்க தான்: முதல்வர் பழனிசாமி

நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் - திமுக தான்; இப்போது எதிர்ப்பு எழுந்துள்ளதால் எங்கள் மீது பழி போடுகின்றனர் என்று, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி இவ்வாறு தெரிவித்தார்.
 | 

முதல்வரின் பேட்டியில் மேலும், ‘அனைத்து ஆட்சிகளிலும் ஆணவப்படுகொலைகள் நடக்கிறது; தமிழகத்தில் ஆணவப்படுகொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன; தனக்கு மக்கள் செல்வாக்கு இல்லாததால் வேலூர் தேர்தலில் போட்டியிடவில்லை என தினகரன் அறிவித்துள்ளார். எட்டு வழிச்சாலை என்பது மாநில அரசின் திட்டமல்ல மத்திய அரசின் திட்டம். இந்த சாலை திட்டத்தால் 70 கிலோ மீட்டர் பயண தூரம் குறையும். 8 வழிச்சாலை திட்டம் வந்தால் அரசுக்கு நற்பெயர் ஏற்படும் என்று தான் எதிர்க்கின்றனர்’ என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP