அதிமுகவுக்கு இது வாடிக்கை தான் : காங்கிரஸ் விமர்சனம்

அதிமுகவை பொருத்தவரை விதிமீறல்களில் ஈடுபடுவது ஆச்சரியமல்ல என்றும், அதுதான் வாடிக்கை எனவும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
 | 

அதிமுகவுக்கு இது வாடிக்கை தான் : காங்கிரஸ் விமர்சனம்

அதிமுகவை பொருத்தவரை விதிமீறல்களில் ஈடுபடுவது ஆச்சரியமல்ல என்றும், அதுதான் வாடிக்கை எனவும் தமிழக  காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி  தெரிவித்துள்ளார். 

தேனி மாவட்டம் குச்சனூர் கோவிலில், பதிக்கப்பட்டுள்ள கோவில் நன்கொடையாளர்கள் பெயர்கள் அடங்கிய கல்வெட்டில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாரின் பெயருடன் பாராளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) என குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, " அதிமுகவை பொருத்தவரை விதிமீறல்களில் ஈடுபடுவது ஆச்சரியமல்ல; அதுதான் வாடிக்கை" எனக் கூறினார். 

எதிர்க்கட்சிகிளின் கூட்டத்திற்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்காதது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "எம்பிக்களை பெற போகிற கட்சிகளை தான் எதிர்க்கட்சி கூட்டத்திற்கு காங்கிரஸ் அழைத்துள்ளது என்றும், அதனால் தான் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரை அழைக்கவில்லை" எனவும் கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP