திருவாரூரில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது!

முன்னாள் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி மறைவையடுத்து காலியாக அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு வருகிற ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
 | 

திருவாரூரில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது!

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதிக்கு வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது.

முன்னாள் தி.மு.க தலைவரும், முதல்வரும்னா கருணாநிதி மறைவையடுத்து காலியாக அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு வருகிற ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தொடர்ந்து, இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி வருகிற ஜனவரி 10ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 

இதையடுத்து இன்று காலை 10.30 மணியளளவில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ளது. 

முன்னதாக, திருவாரூர் இடைத்தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்கட்சியின் வேட்பாளராக சாகுல் அமீது என்பவரை முதல் வேட்பாளராக அறிவித்தார். 

தி.மு.க சார்பில் மு.க.ஸ்டாலின் இந்தத் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும், தினகரனின் அமமுக சார்பிலும், அதிமுக சார்பிலும் யார் போட்டியிடுவார்கள் என இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP