திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 | 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. தீப திருவிழாவினை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சிவனையும், தீபத்தையும் தரிசிப்பார்கள்.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான  கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. சிவச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, தங்க கொடி மரத்தில் காலை 6.15 மணிக்கு கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்தை காண ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்தனர்.

கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 7 ஆம் தேதி தேர்த்திருவிழா நடைபெறுகிறது. டிசம்பர் 10ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை தீப திருவிழாவிற்காக சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து தமிழக போக்குவரத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP