திருப்பாவை – 20

திருமகளே! உலக மக்களுக்கெல்லாம் தாயே, அவர்களின் வறுமை தீர்க்க செல்வம் செழிக்க செம்மையான தனங்களைக் கொண்ட ( காமதேனுவைப் போல ) நப்பின்னை தாயே! துயில் எழுங்கள்! ஆனந்தமாக விழிக்கச் செய்து எம்முடன் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
 | 

திருப்பாவை – 20

முப்பத்து முக்கோடி தேவர்கள் என்பவர்கள் நம் நல்ல குணங்களான கல்வி, செல்வம், ஆரோக்கியம் போன்றவற்றை வளர்த்தும் காத்தும் கொடுக்கக் கூடிய தேவதைகள். கெட்ட குணங்களுக்கென அசுரர் கூட்டம் இருக்கின்றன. பிரபஞ்ச உயிர்கள் அனைத்தின் நன்மைகளைக் காக்கும் பொருட்டு அவர்களுக்கு ஏதேனும் சிரமங்கள் வந்தால், அதைத் தடுக்க தானே முன்சென்று போரிட்டு வெல்லும் செம்மையான வீரனே துயில் எழுமய்யா…

அடைக்கலம் வேண்டி வருபவர்களுக்கு உவந்து ஆறுதலாக இருக்கும் திறனுடையவனே துயில் எழும் ஐயா!

திருமகளே! உலக மக்களுக்கெல்லாம் தாயே, அவர்களின் வறுமை தீர்க்க செல்வம் செழிக்க செம்மையான தனங்களைக் கொண்ட ( காமதேனுவைப் போல )  நப்பின்னை தாயே! துயில் எழுங்கள்!

எங்களுக்கு வேண்டியதை எந்தையிடம் நாங்கள் கேட்பதை விட எங்களுக்காக நீ கேட்கும் போது தான் உன் மணாளன் எளிதில் செவி மடுக்கிறார். ஆகவே, எழுப்பும் போது கண்ணனுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி முதலான மங்களப் பொருட்களைக் காட்டி ஆனந்தமாக விழிக்கச் செய்து எம்முடன் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

 “முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்
செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.”

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP