திருப்பாவை – 17

உண்பதற்கும் உறங்குவதற்குமே நிறைய விதிகளை வகுத்து வைத்த சமூகம் நம்மளுடையது. அப்படியான பண்பாட்டில் இறைவனை வணங்குவதில் மட்டும் சாதாரணமாக விட்டு விடுமா?
 | 

திருப்பாவை – 17

உண்பதற்கும் உறங்குவதற்குமே நிறைய விதிகளை வகுத்து வைத்த சமூகம் நம்மளுடையது. அப்படியான பண்பாட்டில் இறைவனை வணங்குவதில் மட்டும் சாதாரணமாக விட்டு விடுமா? முதலில் வாயிற் காப்போன், பிறகு கொடி மரமும் அதன் சூட்சுமமான கருடன் ஆகியோரை வணங்கி உள்ளே நுழைந்தாயிற்று. இனி நேராகக் கண்ணனைப் போய் எழுப்பி விட முடியுமா? 

அம்பரமே, தண்ணீரே சோறே அறம்செய்யும்…

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், மனமுவந்து உணவு, நீர், உடைகளை தர்மமாகச் செய்து வருபவர் நந்தகோபர். இம்மூன்றயும் தருமமாகச் செய்வதால் கடவுளுக்கு நிகராக நந்தகோபரே! எழுந்தளருளுங்கள். 

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே 

ஆயர்குடிக்குப் பெருமை சேர்க்கும் பெண்களுக்கு எல்லாம் முகப்பாக, பிரதிநிதியாக இருப்பவள் யசோதை. கண்ணனைப் பெற்றதால் அந்தக் குலத்திற்கே பெருமை சேர்த்தவளான யசோதையே “அறிவுறாய்” உன்னைப் போல நாங்களும் கண்ணனைப் பெற வேண்டும் என்று உணர்ந்து எழுந்தருள்வாய்.

அம்பாம் ஊடறுத்து  ஓங்கி உலகளந்த உம்பர்கோமானே…

ஆகாயத்தையெல்லாம் கிழித்தெறிந்து வளர்ந்து உலகை அளந்த தேவர்களுக்கெல்லாம் தேவனே! உலகங்களை எல்லாம் தன் ஈரடிக்குள் கிடத்திக் காட்டுவதற்கு முன் ஏதும் அறியா அப்பாவி போல் வாமனனாகக் காட்சி கொடுத்தாய். அது போல் இப்பொழுதும் ஏதும் அறியாதவன் போல் உறங்குகிறாயே! எழுந்தருள வேண்டும்.

சிறந்த பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழலை தன் திருவடியில் அணிந்துள்ள கோமானே, பலராமா! அண்ணனே உறங்கிக் கிடக்கும் போது இளவலுக்கு கடமை எழாது. விரைவில் எழுந்து உன் தம்பியையும் எழுப்பி விடு. 

 “அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்

எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே

எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்

அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த

உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா

உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய் "
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP