Logo

திருப்பாவை – 15

திருப்பாவை – 15 : யானையைப் போல் எத்தனை பலம் மிக்க துன்பங்கள் வந்தாலும், நற்குணத்திற்கு எதிராக இருக்கும் குணங்களையும் அழித்து அருள் செய்யவல்ல மாயனைப் பாடி வழிபடப் போகிறோம். கிளம்பி வா !
 | 

திருப்பாவை – 15

நாலாயிர திவ்யப் பிரபந்தங்களில் சாரமாக திருப்பாவை இருப்பதாகவும், திருப்பாவையின் சாரமாக இந்த பாசுரம் இருப்பதாகவும் பெரியவர்கள் சொல்கிறார்கள். 

மிகச் சிறப்பான விஷயம் என்னவெனில், 

கோதை நாச்சியார், பதினொரு ஆழ்வார்களுக்கு இடைச்சி (நடுநாயகியாக) பெண்ணாக நின்று, இடைச்சியாக (ஆயர் மகளாக) வரித்துக் கொண்டு, நாலாயிரத்திற்கும் இடைப் பொருளாகப் (கருப்பொருளாக) பாடிய திருப்பாவையின் இடைப் பாசுரமாகிய இந்த பதினைந்தாவது பாசுரத்தின் இடையில் (எட்டில் நான்காவது வரியில்) வைத்திருக்கிறாள் மொத்த சூட்சுமத்தையும். 

இதுவெல்லாம் திட்டம் போட்டு நடத்தியதாக இருக்க முடியாது. இதற்குப் பெயர் தான் இறை சங்கல்பம் என்பது. நாமாக ஏதும் செய்வதில்லை. செய்ய வைக்கப்படுகிறோம். இனி பாசுரம் அனுபவிக்கலாம்.

இன்றுடன் தோழிகளை எழுப்பும் பாசுரம் நிறைவடைகிறது. இந்தப் பாசுரம் கேள்வி பதில் எனும் நாடகப் பாணியில் அமைந்திருக்கிறது என்பதும், ஆண்டாளின் சொந்த ஊரான ஸ்ரீவில்லிப்புத்தூர் பக்கத்து பேச்சு மொழி நடையான ஏலே! தூங்குதியோ போன்றவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்.  

ஏனம்மா சொன்னதைத் திருப்பிச் சொல்லும்  இளங்கிளி போல உன் மனம் சொல்வதையே திரும்பத் திரும்பச் சொல்லி அந்த மயக்கத்தில் கிடப்பவளே இன்னுமா உறங்குகிறாய்? 

யம்மா நல்ல மனுஷிகளா ரொம்ப அலட்டிக்காதீங்க…இதோ கிளம்பிட்டேன் செத்த சத்தம் போடாமல் இருக்கீகளா? 

ஆஹா! இதெல்லாம் நல்லா பேசுவ… உன்னைத் தான் பார்த்துட்டே இருக்கோமே எல்லாம் அறிந்தவள் போல பேசுகிறாயே தவிர, தெளிவாக ஒன்றும் சொன்னதோ செய்தததோ இல்லை

 “வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக”
எல்லாம் வல்லவர் நீங்களே நான் தங்கள்த் திருவடி பற்றிச் சரணடைந்து திருவடியாகவே ஆயிடுக! 

என்று இறைவனிடம் சரணாகதி அடைவதே ஒரே வழி பதிலுரைக்கிறாள். இது தான் அந்தக் கரு. பாசுரத்தின் நடுவில் இருக்கும் நான்காம் வரி. மொத்த பிரபந்தங்களில் உணர்த்தும் சாரம்.

அப்புறம் என்ன தெரியுதுல? உனக்கு மட்டும் என்ன தனி வழியா இருக்கிறது? எழுந்து வா. 

அப்படியா? எல்லாரும் வந்துட்டாங்களா? ஏனெனில் நல்விஷயத்தை நாம் மட்டும் அனுபவிக்க நினைப்பது கள்ளமனதாகி விடும்.

எல்லாரும் வந்தாச்சு , வந்து நீயே எண்ணிப் பார்த்துக்கொள்

சரி இப்ப நாம கிளம்பிப் போய் என்ன செய்யப் போகிறோம்?

யானையைப் போல் எத்தனை பலம் மிக்க துன்பங்கள் வந்தாலும், நற்குணத்திற்கு எதிராக இருக்கும் குணங்களையும் அழித்து அருள் செய்யவல்ல மாயனைப் பாடி வழிபடப் போகிறோம். கிளம்பி வா! 

“எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.”

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP