திருப்பாவை – 13

நீ மட்டும் கண்ணனைப் பாடித் துதித்தாயெனில், பகாசுரன் என்ற கொக்கு கண்ணனை விழுங்கிய போது அதன் வாயை இரண்டாகக் கிழித்து எறிந்து கொன்றது போல, உன்னை விழுங்க வரும் துன்பங்களை எல்லாம் அழித்து உன்னைக் காத்தருள்வான்.
 | 

திருப்பாவை – 13

நீ மட்டும் கண்ணனைப் பாடித் துதித்தாயெனில், பகாசுரன் என்ற கொக்கு கண்ணனை விழுங்கிய போது அதன் வாயை இரண்டாகக் கிழித்து எறிந்து கொன்றது போல, உன்னை விழுங்க வரும் துன்பங்களை எல்லாம் அழித்து உன்னைக் காத்தருள்வான். 

அதுவே ராமனைக் கை கூப்பித் தொழுது பாடினாயென்றால், ராமனுக்கு கண்ணனைப் போல இரண்டு கை கூடத் தேவைப்படாது. ஒரே கையால் கிள்ளிக் களைந்தெடுத்து எரிந்து விடுவான். எப்படியென்றால் முன்பு ராவணனாதியர்களை வேரோடு களைந்தது போல நம் துன்பங்களையும் வேரோடு களைந்து விடுவார்.

விடிந்ததும் இரை தேடி ஆரவாரமாகக் கிளம்பும் பறவை இனங்கள் போல, நாங்களும் விடிந்ததும் நாராயணன் கீர்த்திகளைப் பாடி இறை தேடிக் கிளம்பியுள்ளோம். எழுந்து வா! 

வெள்ளி எழுந்ததும் வியாழன் மறைந்தது போல உனக்கு சுக்கிரன் என்ற வெள்ளி என்ற செல்வம் நிறைந்ததும் வியாழன் என்ற பிரகஸ்பதி என்று அறிவு மறைந்து விட்டது என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் கிருஷ்ணனுடன் நீ மட்டும் களித்துக் கிடப்பதாகத் தனியாகக் கிடப்பாயோ? 

நல்மலரைப் போன்ற கண்களை உடையவளே! அந்த அறிவுக் கண்ணை மூடிக் (படுத்துக்)கிடக்காதே! உடலின்பம் முற்றிலும் களையும்படி குளத்தில் குளித்து மனம் குளிர  அவனைத் துதிக்கக் கிளம்பாமல் இன்னும் படுத்துக் கிடக்கிறாயே. உன்னை நினைத்து எங்களுக்குப்  பெரும் ஆச்சர்யமாக இருக்கிறது !

"புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். "

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP