ஓ.பி.எஸ் மீது அவர்களுக்கு மரியாதை இல்லை: பா.ஜ.கவை குற்றம்சாட்டிய குஷ்பு

துணை முதல்வரை டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சந்திக்காமல் இருந்தது அவமதிக்கும் செயல் என குஷ்பு கூறினார்.
 | 

ஓ.பி.எஸ் மீது அவர்களுக்கு மரியாதை இல்லை: பா.ஜ.கவை குற்றம்சாட்டிய குஷ்பு

துணை முதல்வரை டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சந்திக்காமல் இருந்தது அவமதிக்கும் செயல் என குஷ்பு கூறினார். 

டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார் குஷ்பு. காங்கிரஸின் செய்தி தொடர்பாளரான அவர் பின் செய்தியாளர்களிடம் பேசிய போது, "தமிழகத்தில் பொதுவாக இருக்கும் பிரச்னைகள் குறித்து ராகுல் காந்தியிடம் பேசினேன். உட்கட்சி விவகாரம் குறித்தோ, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் குறித்தோ நானும் பேசவில்லை, அவரும் கேட்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் பற்றி நான் எதுவும் கூற முடியாது. அதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் தான் முடிவெடுப்பார்கள். நான் தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன என்பதை,  எங்கள் கட்சியின் தலைவருக்கு எடுத்துக்கூறினேன்" என்றார். 

மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருந்த போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அவரை சந்திக்காதது குறித்து குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து பேசிய குஷ்பு, "இந்த சம்பவத்தின் மூலம் அவர்கள் துணை முதல்வர் மேல் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இதுக்கூட அவமானம் போல தெரியவில்லை என்றால் எப்படி?. எதையும் தாங்கும் இதயம் என்று கூறுவதற்கு என்ன அர்த்தம் என்று துணை முதல்வர் விளக்க வேண்டும். 

ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருக்கு மருத்துவத்திற்காக பாதுகாப்பு துறையின் ஏர் ஆம்புலன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த நேரத்தில் அது தேவைப்பட்டு இருக்கலாம். இதில் சரி, தவறு என்று நாம் பேச முடியாது. ஆனால் இதே போல அவர்கள் மற்றவர்களுக்கு கொடுப்பார்களா என பார்க்க வேண்டும்.

பிரதமராக ராகுல் காந்தியை பார்க்கவே நாங்கள் விரும்புகிறோம். 2014ல் மோடி மீது இருந்த பிம்பம் இப்போது குறைந்துள்ளது. அந்த பயத்தில் தான் பா.ஜ.கவில் அனைவரும் உள்ளனர்" என்றார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP