"படப்பிடிப்பில் விலங்குகள் துன்புறுத்தப்பட்டால் தடையில்லாச்சான்று கிடையாது"

படப்பிடிப்பின் போதும் விலங்குகள் துன்புறுத்தப்படாமல் இருந்தால் தான் தடையில்லாச்சான்று வழங்கப்படும் என மத்திய விலங்குகள் நல வரிரியத்தின் தலைவர் எஸ்.பி. குப்தா தெரிவித்துள்ளார்.
 | 

"படப்பிடிப்பில் விலங்குகள் துன்புறுத்தப்பட்டால்  தடையில்லாச்சான்று கிடையாது"

படப்பிடிப்பின் போதும் விலங்குகள் துன்புறுத்தப்படாமல் இருந்தால் தான் தடையில்லாச்சான்று வழங்கப்படும் என மத்திய விலங்குகள் நல வரிரியத்தின் தலைவர் எஸ்.பி. குப்தா தெரிவித்துள்ளார். 

பருவநிலை மாற்றம் மற்றும் வனம், சுற்றுச்சூழல் குறித்து, மத்திய விலங்குகள் நல வாரிய தலைவர் எஸ்.பி. குப்தா சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறுகையில், "மாவட்ட அளவிலும்,மாநில அளவிலும் விலங்குகள் நல வாரியம் அமைக்கப்பட வேண்டும். இதை உச்சநீதிமன்றமும் தெரிவித்துள்ளது. மத்திய விலங்குகள் நல வாரியத்தின் அனுமதி இல்லாமல் செயல்படும் விலங்குகள் நல அமைப்புகள் அத்தனையுமே சட்டவிரோதமானவை. 

தமிழகத்தில் சட்டவிரோதமாக செயல்படும் விலங்குகள் நல அமைப்புகள் அதிகமாக உள்ளது. அத்தகைய அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 2019-ல் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை கண்காணிக்க கண்காணிப்புக்குழு உருவாக்கப்படும். கண்காணிப்புக்குழுவில் யார் வேண்டுமானாலும், விருப்பப்பட்டால் இணையலாம். 2018 ஜனவரியில் விதிக்கப்பட்டதை போன்ற விதிமுறைகள் 2019 -லும் விதிக்கப்படும்.

"படப்பிடிப்பில் விலங்குகள் துன்புறுத்தப்பட்டால்  தடையில்லாச்சான்று கிடையாது"

ஜல்லிக்கட்டில் ஏதேனும் விலங்குகள் பாதிப்படைய நேர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். படப்பிடிப்புகள் நடத்தப்படுவதற்கு முன்பு விலங்குகள் நல வாரியத்தின் அனுமதி பெறவேண்டும் என கூறினார்.

மெர்சல், கடைக்குட்டி சிங்கம் படங்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் மறுக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், படப்பிடிப்பு நடைபெறும் பொழுதும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள விலங்குகள் நல வாரியம் அதை முழுமையாக கண்காணிக்கும். படப்பிடிப்பின் போதும் விலங்குகள் துன்புறுத்தப்படாமல் இருந்தால் தான் தடையில்லாச்சான்று வழங்கப்படும் என  விளக்கம் அளித்தார்,

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய விலங்குகள் நல வாரியத்தின் தமிழக அதிகாரி இளங்கோவன் கூறுகையில், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டத்தை விட கூடுதலான அதிகாரிகளை கொண்டு இந்தவருடம் கண்காணிப்பு குழு அமைக்கப்பட உள்ளது. மாடு பிடி வீரர்களுக்கு காயங்கள் ஏற்படுவதை தவிர்க்க,  மாடுகளின் கொம்பின் நுனியில் ரப்பர்   மாட்டுவது. மாடுபிடி வீரர்களுக்கு பாதுகாப்பு கவசம் அணிவிப்பது போன்றவை விலங்குகள் நல வாரியத்தில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP