விஜயகாந்த் உடனான சந்திப்பில் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இல்லை: ராமதாஸ்

விஜயகாந்த் உடனான சந்திப்பின் போது தொகுதிப் பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 | 

விஜயகாந்த் உடனான சந்திப்பில் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இல்லை: ராமதாஸ்

விஜயகாந்த் உடனான சந்திப்பின் போது தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, பாமக ஆகிய இரு கட்சித் தலைவர்களும் இன்று சந்தித்துள்ளனர். 

முன்னதாக ஒருவரையொருவர் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், மனக்கசப்புகளை கடந்து, இன்று விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்றுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். அவருடன் அன்புமணி ராம்தாஸ்-ம் உடன் சென்றுள்ளார். 

பாமக மற்றும் தேமுதிக இடையே தொகுதிகள் ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில்  தொகுதிப் பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை, அவரை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்கவே சென்றதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP