அதிமுகவில் இணைவதற்கு எந்த அவசியமும் இல்லை: டிடிவி.தினகரன்

மதுரை ஆதினம் கூறுவது உண்மையல்ல எனவும், அதிமுகவில் இணையும் அளவுக்கு எவ்வித அவசியமும் ஏற்படவில்லை எனவும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
 | 

அதிமுகவில் இணைவதற்கு எந்த அவசியமும் இல்லை: டிடிவி.தினகரன்

மதுரை ஆதினம் கூறுவது உண்மையல்ல எனவும், அதிமுகவில் இணைவதற்கு எந்த அவசியமும் தங்களுக்கு ஏற்படவில்லை எனவும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலையொட்டி அதிமுக அணியுடன் அமமுக இணையுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தினகரன் நிச்சயம் அதிமுகவில் இணைவார் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் மதுரை ஆதினம் கூறியிருந்தார். 

இது குறித்து பதிலளித்த டி.டி.வி தினகரன், " அதிமுகவில் இணைவதற்காக எந்த சமரச பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனவும், மதுரை ஆதினம் கூறியதில் உண்மை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவில் இணைவதற்கு எந்த அவசியமும் ஏற்படவில்லை என டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP