பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது: சத்யபிரதா சாஹு

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
 | 

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது: சத்யபிரதா சாஹு

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் சின்னமான 'பானை' -யை உடைத்ததன் மூலம் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் நேற்று இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், இந்த வன்முறை சம்பவத்தில் அப்பாவி மக்கள் பலர் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது.

இந்த சம்பவத்தினை அடுத்தும், பொன்பரப்பியில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளதாலும் அங்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று  தொல்.திருமாவளவன் கூறியிருந்தார். 

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, "அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது. அங்கு இரு தரப்பினரிடையே நடந்த மோதலால் மீண்டும் தேர்தல் நடத்த முடியாது. 

ஆனால், தர்மபுரியில் 8 வாக்குச்சாவடிகள், கடலூர் மற்றும் திருவள்ளூரில் தலா ஒரு வாக்குச்சாவடி என 10 வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டுகள் பதிவானது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. இன்று மாலை அறிக்கை அளிக்கப்படவுள்ளது. 

அறிக்கையின் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தப்படுமா? என்பதை தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்" என்று தெரிவித்தார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP