மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பலத்த பாதுகாப்பையும் மீறி திருட்டு..

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பலத்த பாதுகாப்பையும் மீறி திருட்டு..
 | 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பலத்த பாதுகாப்பையும் மீறி திருட்டு..

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் நள்ளிரவு 11 மணி வரை பூஜை நடக்கிறது. அங்கு ஐந்து கோபுர வாசல்களில் எஸ்ஐ உள்பட 4 போலீசார் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தெற்கு கோபுரம் அருகே கோயில் அலுவலகத்தில் இணை கமிஷனர் மற்றும் ஊழியர்களுக்கான அலுவலகம் இயங்கி வருகிறது. இந்தப் பகுதிகளில் கோயில் காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பலத்த பாதுகாப்பையும் மீறி திருட்டு..

நேற்று கோவிலில் இருக்கும் இணை கமிஷனர் அலுவலகத்தில் இருந்த 2 கம்ப்யூட்டர்கள் மற்றும் எல்இடி டிவி மாயமானதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். காவலர்கள் அங்கு இருக்கும்போது, பக்தர்கள் கவனத்தில் இருந்து அதனை திருடிச் சென்றது யார் என புரியாத புதிராக காவல்துறையினர் குழம்பினர். புகாரின்பேரில் கோயில் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP