கொள்ளையனை காதலிக்க வைத்து, கைது செய்த பெண் போலீஸ் 

பெண் போலீஸை காதலிக்க வைத்து, அதன் மூலம் கொள்ளையனை பிடித்த ருசிகர சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்தேறியுள்ளது.
 | 

கொள்ளையனை காதலிக்க வைத்து, கைது செய்த பெண் போலீஸ் 

பெண் போலீஸை காதலிக்க வைத்து, அதன் மூலம் கொள்ளையனை பிடித்த ருசிகர சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்தேறியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் மஹோப்பா மாவட்டத்தில் உள்ள பிஜேரி கிராமத்தை சேர்ந்த பால்கிஷன் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. இவரை, பிடிக்க முடியாமல் போலீஸ் திணற, தொடர்ந்து குற்றச்செயல்களில் பால்கிஷன் ஈடுபட்டு வந்தார். 
திடீரெண்டு ஒருநாள் பால்கிஷனின் செல்போன் எண்ணை போலீசார் கைப்பற்றினர். மேலும், பால்கிஷன் திருமணம் செய்து கொள்வதாகற்காக பெண்ணை தேடிவந்ததாக போலீசாருக்கு தெரியவந்தது. 

இதையடுத்து, ஒரு பெண்ணின் பெயரில் சிம் கார்டை வாங்கிய போலீசார், பெண் சப் இன்ஸ்பெக்டர் மூலம் பால்கிஷனுக்கு கால்செய்யப்பட்டு, சாரி ராங் நம்பர் என்று வைக்கப்பட்டுவிட்டது. இதனால், தன்னை போலீசார் வேவு பார்ப்பதாக சந்தேகமடைந்த பால்கிஷன், அந்த நம்பர் யாருடையது என்று தெரிந்த முயற்சிக்கப்பட்டபோது, ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் நம்பர் என காட்டியது.

இதன்பிறகு, சில நாட்கள் கழித்து  பெண் இன்ஸ்பெக்டர் பால்கிஷனுக்கு போன் செய்ய, அவரோ காதல் மயக்கத்தில் பெண் இன்ஸ்பெக்டரிடம் பேசினார். பின்னர் ஒருநாள் உங்களை திருமணம் செய்து கொள்வதாக பால்கிஷனிடம் தெரிவித்தார். இதனால், சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்றார் பால்கிஷன்.

இதனைத்தொடர்ந்து, உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று பால்கிஷன் தெரிவிக்க, அதற்கு அருகில் உள்ள கோயிலுக்கு வர சொன்னார் அந்த போலீஸ். கோயிலில் மாப்டி போலீசார் ரெடியாக இருந்தனர். அங்கே வந்த பால்கிஷன், பெண் போலீசுக்கு கால் செய்ய, அப்படியே அவரை மடக்கி பிடித்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP