வைரலாகி வரும்  “ChairChallenge”: இதில் பெண்களே வல்லவர்களாம்

கிகி சேலஞ்ச், பாட்டில் சேலஞ்சை தொடர்ந்து, தற்போது சேர் சேலஞ்ச் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 | 

வைரலாகி வரும்  “ChairChallenge”: இதில் பெண்களே வல்லவர்களாம்

கிகி சேலஞ்ச், பாட்டில் சேலஞ்சை தொடர்ந்து, தற்போது சேர் சேலஞ்ச் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சேலஞ்ச் முதலில் தொடங்கியது டிக்டாக்கில் தான். அதில், பலர் இந்த சேலஞ்சை செய்து அசத்தி வருகின்றனர். அதன்பிறகு நன்கு பிரபலமாகிய இந்த சேலஞ்ச் அப்படியே ட்விட்டர் சமூகவலைதளத்திலும் பரவிவிட்டது. இதையடுத்து, இந்த சேர் சேலஞ்ச் சுவாரஸ்யமாக இருப்பதால் பலர் இந்த சேலஞ்சை செய்து டிக்டாக் மற்றும் ட்விட்டரில் வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர்.

பெண்கள் மட்டுமே இந்த சேர் சேலஞ்சை முடிக்க வல்லவர்கள் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். ஆண்கள் மற்றும் பெண்கள் உடலமைப்பின் படி ஈர்ப்பு விசையின் மையங்கள் வெவ்வேறாக இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP