நான் பேசியது சரித்திர உண்மை: கோட்சே குறித்து கமல் விளக்கம்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் ஹிந்து என்று தான் பேசியது ஓர் சரித்திர உண்மை எனமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
 | 

நான் பேசியது சரித்திர உண்மை: கோட்சே குறித்து கமல் விளக்கம்

தீவிரவாதம் குறித்து தான் பேசியது சரித்திர உண்மை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் இன்று விளக்கம் அளித்துள்ளார். 

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் தான் நாதுராம் கோட்ஸே என்றும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியிருந்தார். கமல் இவ்வாறு பேசியதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி கமல் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கமல்ஹாசன் அவர் தீவிரவாதம் குறித்து பேசியதற்கு விளக்கம் அளித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது, "நான் பேசியது சரித்திர உண்மை. இது அனைவருக்கும் தெரியும். மதச்செருக்கு எங்கும் செயல்படாது. உண்மையே வெல்லும். தீவிர அரசியலில் இறங்கியதால், தீவிரமாகத் தான் பேசுவேன்.

நான் பேசியது சரித்திர உண்மை: கோட்சே குறித்து கமல் விளக்கம்

கோட்ஸே மட்டுமா இந்து? கொல்லப்பட்ட காந்தியும் இந்து தான். தீவிரவாதத்திற்கான அர்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். நான் என்ன பேசினேன் என்பதை முழுமையாக கேட்டுவிட்டு பேச வேண்டும். என் வீட்டில் உள்ளவர்களும் இந்துக்கள் தான். எனவே இந்துக்கள் புண்படும் வகையில் நான் பேச மாட்டேன். 

தலையையும், வாலையும் வெட்டிவிட்டு இடையில் இருப்பதை மட்டும் ஊடகங்கள் ஒளிபரப்புகிறார்கள். அப்படி என்றால் என் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவது போல, ஊடகங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யவேண்டும். நான் செய்தது தவறு என்றால் ஊடகங்கள் செய்ததும் தவறு தான். 

என்னை அவமானப்படுத்தும் நோக்கில் என்னுடைய கொள்கைகளை கையில் எடுக்காதீர்கள். நீங்கள் தோற்றுத்தான் போவீர்கள்" என்று பேசியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP