சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்! இது ஜெயக்குமாருகான ஸ்பெஷல் மீம்ஸ்

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால் என்ற பாடலுக்கு தன்னை வைத்து மீம்ஸ்போட்ட நெட்டிசன்களுக்கு பாராட்டுக்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 | 

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்! இது ஜெயக்குமாருகான ஸ்பெஷல் மீம்ஸ்

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால் என்ற பாடலுக்கு தன்னை வைத்து மீம்ஸ்போட்ட நெட்டிசன்களுக்கு பாராட்டுக்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தினமும் செய்தியாளர்களை சந்திக்கும் ரிப்போர்ட்டர்ஸ் ஃபிரண்ட்லி அமைச்சரான ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் பேசும் போது காமெடியான வசனங்களையும், அடுக்கு மொழிகளையும், ரைமிங் மற்றும் டைமிங் காலய்ப்புகளையும் அள்ளி வீசுவார். அதேபோல் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கும் அமைச்சர் ஜெயக்குமார் ரொம்பவே ஸ்பெஷல். அவர் கூறும் காமெடிகளுக்கு அடுத்த 10 நிமிடத்தில் சுடசுட மீம்ஸ்களை அனல்பறக்க செய்வர். தனக்காக மீம்ஸ் போடுபவர்களை கடிந்து கொள்ளாது, அதையும், ரசிக்கும் ஜெயக்குமார் ஒருமுறை செய்தியாளர் சந்திப்பின்போது மீம்ஸ் உருவாக்கி கமென்ட் செய்பவர்கள் தைரியம் இருந்தால், பெயர், செல்போன் எண்ணுடன் பதிவிடுமாறு நெட்டிசன்களுக்கு சவால் விடுத்திருந்தார். இந்த சவாலுக்கு பிறகு மீம்ஸ் கவுண்ட் இன்னும் அதிகமானது. ஊடகங்களில் அவர் என்ன கருத்து கூறினாலும், உடனே அதை மீம்ஸ் ஆக்கி வைரலாக்கி விடுகின்றனர்.

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்! இது ஜெயக்குமாருகான ஸ்பெஷல் மீம்ஸ்

இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இணையத்தின் பயன்பாடு மற்றும் தேவைகள், தொழில்நுட்ப வளர்ச்சி தலைப்புகளில் உரையாடினார். அப்போது,  “தன்னை கலாய்த்து வைரலான மீம்ஸ் ஒன்றை மாணவர்கள் மத்தியில் கூறினார். என்னை வைத்துதான் அதிகம் மீம்ஸ் போடுகின்றனர். என் புகைப்படத்தை வைத்து குறிப்பு சொல்லும் பாடல் விளையாட்டு ஒன்றை மீம்ஸாக வடிவமைத்துள்ளனர். அதை பார்த்தவுடன் ஒரு நிமிடம் எனக்கே புரியவில்லை, பிறகு என் நண்பரிடம் கேட்டால் அது சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால் என்ற பாடலின் குறிப்பு மீம்ஸ் என கூறினார். மீம் பாய்ஸ் எப்படியெல்லாம் ரூம்போட்டு யோக்கிறாங்க என எனக்கே சிரிப்பு வந்துவிட்டது. பிறரை சந்தோஷப்படுத்த என்னை கலாய்த்து மீம்ஸ் போடும் நெட்டிசன்களுக்கு பாராட்டுக்கள்!” என மாணவர்களிடம் கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP