ஐஐடி மாணவி பாத்திமாவின் தற்கொலை பதிவு உண்மையானது தான்! தடவியல் நிபுணர

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக அவரது செல்போனில் பதிவிட்ட கடிதம் போலியானது அல்ல, உண்மையானது என்று தெரியவந்துள்ளது.
 | 

ஐஐடி மாணவி பாத்திமாவின்  தற்கொலை பதிவு உண்மையானது தான்! தடவியல் நிபுணர் அறிக்கை!

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக அவரது செல்போனில் பதிவிட்ட கடிதம் போலியானது அல்ல, உண்மையானது என்று தெரியவந்துள்ளது.

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த நவம்பர் 9ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
தன் தற்கொலைக்கு காரணம் மூன்று ஆசிரியர்கள் என்று தனது செல்போனில் பாத்திமா பதிவு செய்திருந்தார். பாத்திமாவின் இந்த பதிவு போலியானதா, உண்மையானதா என்று தடவியல் துறை சோதனை நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்தது.

அதில்,  பாத்திமா தற்கொலை தொடர்பாக அவரது செல்போனில் பதிவிட்ட கடிதம் போலியானது அல்ல, உண்மையானது என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, தடவியல் நிபுணர்களின் முதற்கட்ட  அறிக்கை நீதிமன்றம் மூலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP