ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை சென்னை வந்தது

ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள பஞ்சலோக நடராஜர் சிலை டெல்லியில் ரயிலில் இருந்து சென்னை வந்தடைந்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிலைக்கு மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 | 

சிலையை கொண்ட வந்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.மாணிக்கவேல், ‘கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம். சிலைக்கடத்தல் வழக்குகளும் தனது குழு மற்றும் ஊடகங்களும், உதவியாக இருந்தன’ என்றார்.

மேலும், சிலைகள் கடத்தல் வழக்கில் தமிழக அரசை குறை சொல்ல விரும்பவில்லை என்றும், தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில்தான் பிரச்னை உள்ளது என்றும் பொன்.மாணிக்க வேல் கூறியுள்ளார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP