துளையிடும் பணியின் வேகம் அதிகரித்துள்ளது!

நடுக்காட்டுப்பட்டியில் கடினமான பாறைகளால் தாமதமாகி வந்த துளையிடும் பணி தற்போது வேகமெடுத்துள்ளது.
 | 

துளையிடும் பணியின் வேகம் அதிகரித்துள்ளது!

நடுக்காட்டுப்பட்டியில் கடினமான பாறைகளால் தாமதமாகி வந்த துளையிடும் பணி தற்போது வேகமெடுத்துள்ளது. 

ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக மற்றொரு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 90 அடி ஆழத்திற்கு துளையிட இருக்கும் நிலையில், கடினமான பாறைகளால் துளையிடுவதில் சிரமம் நீடித்து வந்தது. இந்நிலையில், துளையிடும் பணி தற்போது வேகமெடுத்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடினமான பாறையை துளையிட்டதையடுத்து, தற்போது பாறையின் தன்மை இலகுவாக இருப்பதாகவும், இதனால் பணி வேகமாக நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 2வது ரிக் இயந்திரம் மூலம் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது முதல் ரிக் இயந்திரத்தை விட 3 மடங்கு திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP