Logo

சுடிதார் அளவு சரியில்லை! 20,000 நஷ்டஈடு வாங்கிய பெண்!

தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில் புதுத்துணிகளை அணியும் பழக்கம் காலங்காலமாகவே தமிழகத்தில் இருந்து வருகிறது. பண்டிகைகள் கால கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவே புதுத் துணிகளை அணிவதும் இருந்து வருகிறது.
 | 

சுடிதார் அளவு சரியில்லை! 20,000 நஷ்டஈடு வாங்கிய பெண்!

தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில்  புதுத்துணிகளை அணியும் பழக்கம் காலங்காலமாகவே தமிழகத்தில் இருந்து வருகிறது. பண்டிகைகள் கால கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவே புதுத் துணிகளை அணிவதும் இருந்து வருகிறது. இந்நிலையில், தீபாவளியன்று  புதுத்துணி அணிவதற்காக, கடந்த 2017ம் ஆண்டு 11 வயது சிறுமி மகாலட்சுமி நெல்லை டவுனில் உள்ள தனியார் துணிக்கடைக்கு சென்றுள்ளார். அந்தக் கடையில் ஆசையாசையாய் தனக்குப் பிடித்த ரூ.1000 மதிப்புள்ள அனார்கலி சுடிதாரை வாங்கியுள்ளார். வீட்டுக்கு வந்து பார்த்த போது சுடிதார் டாப் பொருந்தியுள்ளது. ஆனால் பேண்ட் சிறுமிக்கு சரியாக இல்லை. 

மாதக் கணக்கில் தாயாரிடம், தீபாவளிக்கு அனார்கலி சுடிதார் கேட்டு அடம்பிடித்து சாதித்த சிறுமி, அளவு சரியில்லாததால் தீபாவளிக்கு புதுத்துணி போடாமலே இருந்துள்ளார். இதையடுத்து சுடிதாரை மாற்றம் செய்ய சிறுமி மகாலட்சுமியின் தாய் கோமதி சிறுமியுடன் கடைக்கு சென்று கேட்ட போது, கடை நிர்வாகம் அதை மாற்றி தர முடியாது என மறுத்துள்ளது.

இதை தொடர்ந்து கோமதி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், துணிக்கடை நிறுவனத்தின் நேர்மையற்ற வாணிபம் மற்றும் சேவை குறைபாடு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான மகாலட்சுமி தரப்புக்கு நஷ்ட ஈடாக ரூ. 15 ஆயிரத்தையும், வழக்குக்காகச் செலவு செய்த 5000 ரூபாயும் சேர்த்து 20 ஆயிரத்தை நஷ்டஈடாக கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் மகாலட்சுமி வாங்கிய அனார்கலி சுடிதாரை பெற்றுக் கொண்டு அதன் விலையான 1000 ரூபாயை ஒரு மாதத்தில் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு கொடுக்க தவறினால் 6% வட்டி சேர்த்து கொடுக்க வேண்டும் என்று அதிரடியாகக் கூறியுள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP