Logo

நீட் தேர்வு இருக்கக்கூடாது என்பதே தமிழகத்தின் கொள்கை: செங்கோட்டையன்

மாநிலத்தில் நீட் தேர்வு இருக்கக்கூடாது என்பது தான் தமிழகத்தின் கொள்ளை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளர்.
 | 

நீட் தேர்வு இருக்கக்கூடாது என்பதே தமிழகத்தின் கொள்கை: செங்கோட்டையன்

மாநிலத்தில் நீட் தேர்வு இருக்கக்கூடாது என்பது தான் தமிழகத்தின் கொள்கை என பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளர். 

சென்னை ராயபுரத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், "தமிழகத்தில் நீட் தேர்வு இருக்கக்கூடாது என்பது தான் தமிழகத்தின் கொள்கை எனவும், இரு மொழி கொள்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் பி.இ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலையே உள்ளதாக குறிப்பிட்ட அவர், பி.இ மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என கூறினார். 

மேலும், ஆயிரம் பள்ளிகளில் ஆய்வுக்கூடம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், இதுவரை 15.32 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனை மாணவர்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், இந்தியாவே வியக்கதக்க அளவிற்கு பள்ளிக்கல்வியில் பாட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு சி.ஏ தேர்வு எழுதுவதற்கான பயிற்சி அளிக்கப்படுவதாகவும் கூறினார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP