கமலின் கருத்து குறித்து பிரதமர் கூறியது சரியானதே: தமிழிசை

ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் கண்டிப்பாக இந்துவாக இருக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறியது சரி தான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 | 

கமலின் கருத்து குறித்து பிரதமர் கூறியது சரியானதே: தமிழிசை

ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் கண்டிப்பாக இந்துவாக இருக்க முடியாது என பிரதமர் மோடி கூறியது சரி தான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் தான் நாதுராம் கோட்ஸே என்றும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியிருந்தார். 

கமல் இவ்வாறு பேசியதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கமலின் கருத்து குறித்து பிரதமர் மோடி, ஆங்கில தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் கண்டிப்பாக இந்துவாக இருக்க முடியாது. உலகம் ஒரு குடும்பம் தான் இந்து மதத்தின் கொள்கை" என்று கூறியுள்ளார். 

தொடர்ந்து கமலின் கருத்து குறித்து செய்தியாளர்கள் தமிழிசையிடம் கேட்டபோது, "கமல்ஹாசனின் கருத்து தவறானது. அவர் கூறியதை திரும்ப பெறவேண்டும். தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது. பிரதமரின் கருத்து மிகச் சரியானது" என்று பதில் அளித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP