பிரதமருக்கு சரித்திரம் பதில் சொல்லும்: கமல்ஹாசன்

பிரதமருக்கு நான் பதில் சொல்ல மாட்டேன், சரித்திரம் பதில் சொல்லும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 | 

பிரதமருக்கு சரித்திரம் பதில் சொல்லும்: கமல்ஹாசன்

பிரதமருக்கு நான் பதில் சொல்லமாட்டேன், சரித்திரம் பதில் சொல்லும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "வாலையும், தலையையும் கத்தரித்து போட்டால், யாரும் யாரையும் குற்றஞ்சொல்ல முடியாது என்றும், இந்துக்கள் யார்? ஆர்.எஸ்.எஸ் யார்? என்பதை பிரித்து பார்க்க வேண்டும்" என்றும் கூறினார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இது உருவான சர்ச்சை அல்ல, உருவாக்கப்பட்ட சர்ச்சை. இந்த விவகாரத்தில் பிரதமருக்கு நான் பதில் சொல்லமாட்டேன், சரித்திரம் அவருக்கு பதில் சொல்லும். நான் கூறிய கருத்தில் உறுதியாக உள்ளேன்" என தெரிவித்தார். 

மேலும், "தான் இதே கருத்தை மெரினாவில் பேசியபோது கண்டு கொள்ளாத நிலையில், அரவக்குறிச்சியில் பேசியதை பெரிதுபடுத்துயுள்ளனர். சூலூரில் பரப்புரை மேற்கொள்ள தடை விதித்ததிலும் அரசியல் உள்ளது. தனது அரசியல் பணியிலும் குறுக்கீடு உள்ளதாக தெரிவித்த அவர், சூலூரில் பதற்றமான சூழல் இருந்தால் தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது?" என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், தான் கைது செய்யப்படுவதற்கு பயப்படவில்லை என்றும், தன்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும் என்பதால் கைது செய்யாமல் இருப்பது நல்லது என அறிவுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP