பிரதமர் அனைத்து மொழிகளையும் ஒரே அளவில் தான் நேசிக்கிறார்: முரளிதரன்

இந்தியையும், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளையும் ஒரே அளவில்தான் பிரதமர் நேசிக்கிறார் என மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
 | 

பிரதமர் அனைத்து மொழிகளையும் ஒரே அளவில் தான் நேசிக்கிறார்: முரளிதரன்

இந்தியையும், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளையும் ஒரே அளவில்தான் பிரதமர் நேசிக்கிறார் என மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். 

சென்னை இந்தி பிரச்சார சபாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் முரளிதரன், "தமிழர்கள் மீது இந்தியை திணிக்க மத்திய அரசு ஒருபோதும் விரும்பியதில்லை என்றும், இந்தியையும், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளையும் பிரதமர் ஒரே அளவில் தான் நேசிக்கிறார் எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இந்திக்கு எதிரான மனநிலை உள்ளது போல காட்சிப்படுத்துவது முரணாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், பிற மொழிகளை விருப்பத்தின் பேரில் கற்றுக்கொள்வதில் தவறில்லை என்றும் இந்தி பிரச்சார சபாவில் தமிழர்களே அதிகம் இந்தி பயில்வதாகவும் கூறினார். அதேபோல், தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் என மத்திய அரசு பாகுபாடு பார்ப்பதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP