தபால்துறை தேர்வுகள் தொடங்கின; கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில்..

மொழிப் பிரச்சினையில் சர்ச்சைக்குள்ளான தபால்துறை தேர்வுகள் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகின்றன. வினாத்தாளில் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இடம்பெற்றுள்ளன.
 | 

தபால் துறையில் மெயில் கார்டு, தபால்காரர், அஞ்சலக உதவியாளர், சார்டிங் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட தபால் துறையின் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாநில மொழிகளில் இடம்பெற்றிருந்தன. 

இந்நிலையில், இனிவரும் தபால் துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில் முதல் தாளுக்கான தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என்றும் இரண்டாம் தாள் மட்டும் அந்தந்த மாநிலங்களில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான மெயில் கார்டு, தபால்காரர் உள்ளிட்ட தபால்துறை தேர்வுகள் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த வினாத்தாளில் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இடம்பெற்றுள்ளன. 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP