இடி விழுந்ததால் உருவான புதிய அருவி... இயற்கையின் அற்புதத்தை கண்டு பிரமிக்கும் மக்கள்

நள்ளிரவில் இடி விழுந்ததால் ஒரு புதிய அருவி உருவாகியுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் உறையவைத்துள்ளது.
 | 

இடி விழுந்ததால் உருவான புதிய அருவி... இயற்கையின் அற்புதத்தை கண்டு பிரமிக்கும் மக்கள்

நள்ளிரவில் இடி விழுந்ததால் ஒரு புதிய அருவி உருவாகியுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் உறையவைத்துள்ளது. 

பெரம்பலூர் மாவட்டம் அய்யர்பாளையம் கிராமத்தையொட்டி பச்சைமலை அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படும் இதனால் மக்கள் அப்பகுதிகளில் அதிகம் செல்வதில்லை. இந்நிலையில் நேற்று நள்ளிரவு அந்த மலையில் பெரும் சத்தத்துடன் இடி விழுந்துள்ளது. பூகம்பம் போல பெரும் அதிர்வை உண்டாக்கியதால் மக்கள் அச்சத்துடன் வெளியே வந்து பார்த்தபோது, நம்ப முடியாத அதிசயம் நிகழ்ந்திருந்தது. இடி விழுந்த இடத்திலிருந்து நீர் ஊற்று உருவாகி அருவியாக தண்ணீர் கொட்டியது. இதை கண்டு வியந்து போன மக்கள் இயற்கையின் அற்புதத்தை காணும் பாக்கியம் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். இந்த திடீர் அருவி குறித்து கேள்விப்பட்ட சுற்றுவட்டார மக்கள் அங்கு வந்து கண்டுகளிப்பதுடன் குளித்துவிட்டும் செல்கின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP