மேட்டுப்பாளையம் துயரம்! சுவர் இடிந்து விழுந்து இறந்தவர்களின் உறவினர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல்!

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து வீட்டின் மீது விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு பதிவு உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே உடல் வாங்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதி அருகே ஏ.டி காலனியில் இன்று அதிகாலை வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு காரணமான சுற்றுச்சுவர் கட்டிய வீட்டின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் மேட்டுப்பாளையம் சிக்ஸ் கார்னர் பகுதியில் சாதிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் திடீரென மேட்டுப்பாளையம் உதகை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த சுவரை அப்புறப்படுத்தப் பல முறை கூறியும் அதனை அலட்சியப்படுத்தி விபத்தை ஏற்படுத்தி 17 உயிரை காவு வாங்கிய வீட்டின் உரிமையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கூறி போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். 

இதனை தொடர்ந்து, உயிரிழந்த விவகாரத்தில், உடலை வாங்க மறுப்பு தெரிவித்த உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இலவச வீடு, இழப்பீடு தொகையை 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், வன்கொடுமை தடுப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். 

இதனிடையே விபத்துக்கு காரணமான சுற்றுவர் அமைத்த வீட்டின் உரிமையாளர் சிவ சுப்பரமனியத்தின் மீது மேட்டுப்பாளையம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்துதல், பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், போராட்டம் நடத்தி வரும் உறவினர்கள் மற்றும் சாதிய அமைப்புகள் தி.மு.க உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் கோவை ஆட்சியர் கு.ராசாமணி மற்றும் மேற்கு மண்டல காவல் தலைவர் பெரியய்யா மற்றும் துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர். தமிழக அரசிடம் பேசி கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கூறிய போதும் இதுவரை போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில், போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார், 17 பேரின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP