எனக்கு நடந்த கொடுமைகளை பரியேறும் பெருமாள் படத்தில் காட்டியுள்ளனர்: நல்லக்கண்ணு

தனக்கு தன் நண்பர்களுக்கும் நடந்த கொடுமைகளை அனைத்தும் பரியேறும் பெருமாள் படத்தல் காட்சிகளாக வந்துள்ளன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பாராட்டி தெரிவித்துள்ளார்.
 | 

எனக்கு நடந்த கொடுமைகளை பரியேறும் பெருமாள் படத்தில் காட்டியுள்ளனர்: நல்லக்கண்ணு

தனக்கும், தன் நண்பர்களுக்கும் நடந்த கொடுமைகள் அனைத்தும் பரியேறும் பெருமாள் படத்தில் காட்சிகளாக வந்துள்ளன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார். 

பரியேறும் பெருமாள் படக்குழுவினருக்கு நெல்லையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் , "தமிழகத்தில் தொடர்ந்து ஆணவக்கொலை நடந்து கொண்டு இருக்கிறது. அதைத் தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும். 

ஆணவக் கொலையை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. சுயமரியாதை இயக்கங்கள் ஜனநாயக சக்திகள் இணைந்து ஆணவக் கொலைகளை தடுக்க வேண்டும். எனக்கும், எனது நண்பர்களுக்கும் நடந்த கொடுமைகள் பரியேறும் பெருமாள் படத்தில் காட்சிகளாக வந்துள்ளன" என்றார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP