சேலம் உருக்காலையின் நஷ்டத்திற்கு அதிக மின் கட்டணமே காரணம் : மத்திய அமைச்சர்

நாட்டின் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் மின்சார கட்டணம் அதிக அளவில் இருப்பதாலேயே சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதாக மத்திய உருக்கு மற்றும் எஃகு துறை அமைச்சர் சௌத்திரி பீரேந்திரசிங் குற்றம்சாட்டியுள்ளார்.
 | 

சேலம் உருக்காலையின் நஷ்டத்திற்கு அதிக மின் கட்டணமே காரணம் : மத்திய அமைச்சர்

நாட்டின் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் மின்சார கட்டணம் அதிக அளவில் இருப்பதாலேயே சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதாக மத்திய உருக்கு மற்றும் எஃகு துறை அமைச்சர் சௌத்திரி பீரேந்திரசிங் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய உருக்கு மற்றும் எஃகு துறை அமைச்சர் சௌத்திரி பீரேந்திரசிங் மற்றும் செயில் நிறுவன தலைவர் ஸ்ரீ அனில்குமார் சௌத்ரி ஆகியோர் இன்று சேலம் உருக்காலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "சேலம் உருக்காலை கடந்த பத்து ஆண்டுகளில் ரூ 2 ஆயிரம் கோடி நட்டத்தில் உள்ளது. உலக தரம் வாய்ந்த்து, சேலம் ஸ்டீல் உற்பத்தி என்ற புகழ் பெற்ற ஆலை நட்டத்தில் இயங்குவது வருத்தம் அளிக்கிறது. அடுத்த ஓர் ஆண்டில் சேலம் உருக்காலை நட்டத்தை ஈடுகட்டும் அளவிற்கு நடவடிக்கை எடுக்க நிர்வாகமும், ஊழியர்களும் பல்வேறு ஆலோசனைகளை  வழங்கியுள்ளனர்" என்றார்.

உருக்காலை தனியார் மயமாக்கப்படுவதாக ஊழியர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் மின்சாரத்தால் ஏற்படும் நட்டத்தை உடனடியாக சரிகட்டும் வகையில் முதற்கட்டமாக 50 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சோலார் திட்டத்தை அமைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

"நஷ்டத்திற்கான முக்கிய காரணமாக கருதப்படுவது, மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் மின்சாரத்திற்கான கட்டணம் அதிக அளவில் இருப்பதே. உருக்காலையை பொறுத்தவரை மின்சாரத்திற்கான கட்டணம் தான் அதிக அளவில் உள்ளது. மின்சார கட்டணத்தை குறைத்திட தமிழக அரசிடம் பல முறை கோரிக்கை வைத்தும், அரசு இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உருக்காலையின் மின்சார கட்டணத்தை குறைக்க 50 மெகா வாட் மின் உற்பத்தி கொடுக்கும் வகையில் சோலார் திட்டத்தை செயல்ப்படுத்திட உள்ளோம். இதனால் 20% நஷ்டம் குறைய வாய்ப்பு உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP