ஓடும் ரயிலில் சாகசம் செய்த பெண்! இரண்டு கால்களையும் இழந்த பரிதாபம்!

ஓடும் ரயிலில் சாகசம் செய்த பெண்! இரண்டு கால்களையும் இழந்த பரிதாபம்!
 | 

ஓடும் ரயிலில் சாகசம் செய்த பெண்! இரண்டு கால்களையும் இழந்த பரிதாபம்!

ஓடும் ரயிலில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்த இளம்பெண் தன் இரு கால்களையும் இழந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

டெல்லியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நிஜாமுதின் ரயில் நிலையத்தில், ரயில் ஒன்று சென்று மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண் ஒருவர் இறங்க முயற்சி செய்தார். ரயில் செல்லும் திசையில் இறங்காமல், நின்று கொண்டிருக்கும் ரயிலில் இருந்து இறங்குவது போல நேராக இறங்க முயற்சி செய்ததால், நிலை தடுமாறிய அவர் ரயிலுக்கும் பிளாட்ஃபாரத்திற்கும் இடையில் சிக்கினார். அங்கு பாதுகாப்பு பணில் இருந்த வீரர்கள் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அதற்குள் இந்த கோர விபத்தில் அந்த இளம்பெண் தன் இரு கால்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஆபத்தான நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP