நின்ற கோலத்தில் அத்திவரதர்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்குப் பின் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் வழங்கிக் கொண்டிருக்கும் அத்திவரதர், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
 | 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில், வெள்ளி பெட்டியில் தண்ணீருக்குள் வைக்கப்பட்டிருந்த அத்திவரதர், 40 ஆண்டுகளுக்குப் பின், பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். ஜூலை 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு சயனக் கோலத்தில் காட்சி அளித்து வரும் அவர், ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் காட்சி அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஏற்கனவே சயனக் கோலத்தில் உள்ள அத்திவரதரைக் காண, தினமும் லட்சக்கணக்கானோர் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில், அவர் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பதைக் காண, மேலும்  பக்தர்கள் குவியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP