ஐஐடியில் மாணவர்கள் துன்புறுத்தப்படுவது உண்மைதான்... விசாரணையில் தகவல்

சென்னை ஐஐடியில் மாணவர்கள் துன்புறுத்தப்படுவது உண்மைதான் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் சுஷ்மா வித்வான் தெரிவித்துள்ளார்.
 | 

ஐஐடியில் மாணவர்கள் துன்புறுத்தப்படுவது உண்மைதான்... விசாரணையில் தகவல்

சென்னை ஐஐடியில் மாணவர்கள் துன்புறுத்தப்படுவது உண்மைதான் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் சுஷ்மா வித்வான் தெரிவித்துள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள  ஐஐடி யில் முதலாம் ஆண்டு படித்து வந்த கேரளா மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் தற்கொலை என வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், மாணவியின் செல்போனில் கிடைத்த தகவல் மூலம் அவர் பேராசிரியர்களின் நெருக்கடியால் தான் உயிரிழந்திருப்பதாக அவரது தந்தை லத்தீப் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சென்னை ஐஐடியில் இதுவரை 52 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், சென்னை ஐஐடியில் மாணவர்கள் துன்புறுத்தப்படுவது  குறித்து விசாரணை மேற்கொண்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் சுஷ்மா வித்வான், மாணவர்கள் துன்புறுத்தப்படுவது உண்மைதான் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ஐஐடி பிரச்சினை தொடர்பாக, ஐஐடி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப‌ தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP