மின் கம்பத்தின் உச்சியில் அமர்ந்து உணவருந்தும் மின்வாரிய ஊழியர்! வைரலாகும் போட்டோ

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மின் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அங்கு மின்வாரிய ஊழியர் ஒருவர் பணி நேரத்தின்போது மின் கம்பத்தின் உச்சியில் அமர்ந்து உணவருந்தும் புகைப்படம் வைரலாகிவருகிறது.
 | 

மின் கம்பத்தின் உச்சியில் அமர்ந்து உணவருந்தும் மின்வாரிய ஊழியர்! வைரலாகும் போட்டோ

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்சார சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பணி நேரத்தின்போது மின் கம்பத்தின் உச்சியில் அமர்ந்து மின்சாரவாரிய ஊழியர் ஒருவர் உணவருந்தும் ஊழியரின் புகைப்படம் வைரலாகிவருகிறது. 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் இணைப்புகளை சரிசெய்வதற்காக சுமார் 10,000க்கும் அதிகமானோர் டெல்டா மாவட்டங்களில் இரவு பகல் பாராமல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நாகையை சேர்ந்த சண்முகம் என்பவர் சீரமைப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதேபோன்று கடந்த 20ம் தேதி புதுக்கோட்டையில் மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கலைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களுக்கு முதல்வர் நிவாரண உதவிகளையும் அறிவித்திருந்தார். இதற்கிடையில் கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுவோர்களுக்கு மூன்று நாள் சம்பளம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்களும், தன்னார்வலர்களும் உணவளித்து வேலை வாங்குவதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் மின்கம்பத்தை சரி செய்து கொண்டிருக்கும் பணியாளர் ஒருவர், உணவருந்த நேரம் இல்லாததால் கம்பத்தின் உச்சியில் உட்கார்ந்து சாப்பிடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP