அத்திவரதர் தரிசனம் நாளை மட்டும் மாலை 5 மணியுடன் நிறைவு: மாவட்ட ஆட்சியர்

அத்திவரதர் தரிசனம் நாளை மட்டும் மாலை 5 மணியுடன் நிறைவு பெறும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.
 | 

அத்திவரதர் தரிசனம் நாளை மட்டும் மாலை 5 மணியுடன் நிறைவு: மாவட்ட ஆட்சியர்

அத்திவரதர் தரிசனம் நாளை மட்டும்  மாலை 5 மணியுடன் நிறைவு பெறும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதமர் உற்சவம் நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு பிறகு 48 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். உற்சவம் வரும் 16ஆம் தேதியுடன் நிறைவுபெறும் நிலையில், பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 

இந்நிலையில், நாளை மட்டும் மாலை 5 மணியுடன் நிறைவு பெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாளை வரதராஜ பெருமாளுக்கு கருட சேவை நடைபெற உள்ளதால் அத்தி வரதர் தரிசனம் 5 மணியுடன் நிறைவு பெறும் என்றும் இறுதி நாளான 16ஆம் தேதி காலை 5 மணி முதல் தரிசனம் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 16ஆம் தேதி தரிசனத்திற்கு வரும்  பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்த பிறகே, தரிசனம் நிறைவு பெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP