கஜா புயல் நிவாரண நிதி தொடர்பாக இன்று பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர்

கடந்த 16-ம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயலால், டெல்டா மாவட்டங்கள் அடைந்துள்ள சேதம் குறித்த அறிக்கையுடன் முதலமைச்சர் பழனிசாமி, டெல்லி சென்றுள்ளார். இன்று பிரதமர் மோடியை சந்தித்து கஜா புயல் குறித்து எடுத்துரைத்து நிவாரண நிதி கோரவுள்ளார்.
 | 

கஜா புயல் நிவாரண நிதி தொடர்பாக இன்று பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர்

தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று பிரதமர் மோடியை சந்தித்து கஜா புயல் குறித்து பேசவுள்ளார்.

கடந்த 16-ம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயலால், டெல்டா மாவட்டங்கள் கடும் சேதம் அடைந்துள்ளன. பல வீடுகள், பயிர்கள், மரங்கள் என அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முழுவதையும் கஜா புயல் சீர்குலைத்துள்ளது. இந்நிலையில் சேதம் குறித்த அறிக்கையுடன் முதலமைச்சர் பழனிசாமி நேற்று மாலை டெல்லி சென்றார். அங்கு அதிமுக எம்.பி.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து முதலமைச்சர் இன்று காலை 9.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார்.  இந்த சந்திப்பின் போது,  தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புகளை எடுத்துரைத்து, தேவையான நிவாரண நிதியை கோரவுள்ளார். உடனடி நிதியாக மத்திய அரசிடம் இருந்து ரூ.13,000 கோடி கேட்க முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக முதலமைச்சரை தொடர்ந்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும் இன்று பிரதமரை சந்தித்து புயல் நிவாரண நிதி கோர உள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP