சமூகத்தின் மிகப் பெரிய பிரச்னை சாதி- ப.சிதம்பரம்

ஜாதி தான் சமூகத்துக்கு மிகப் பெரிய பிரச்னை என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
 | 

சமூகத்தின் மிகப் பெரிய பிரச்னை சாதி- ப.சிதம்பரம்

ஜாதி தான் சமூகத்துக்கு மிகப் பெரிய பிரச்னை என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

தமிழக மாணவர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
 விழாவில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.௭ஸ். இளங்கோவன், உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய பா. சிதம்பரம்,  “தகவல் அறியும் உரிமைச்சட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம், கட்டாய கல்வி உரிமை சட்டம், உணவுக்கு உரிமை என பல பயனுள்ள திட்டங்களை காங்கிரஸ் கொண்டுவந்துள்ளது. சமுதாயத்தில் பேதங்கள் இருக்கிறது. ஜாதி வேற்றுமை பிரச்சனை இன்னும் இந்திய நாட்டில் இருக்கிறது. ஜாதி சமூகத்துக்கு மிகப் பெரிய பிரச்சனை என கூறினார்.

சாதியை ஒழிக்க போராடிய அம்பேத்கர் தான் மிகச்சிறந்த புரட்சியாளர் எனக்கூறிய அவர், அண்மைகாலமாக குஜராத் உனாவில் தலித், இஸ்லாமிய சமூக மக்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது. இதனை ஆட்சி /பொறுப்பில் இருப்பவர்கள் கண்டிக்க இல்லை. இஸ்லாமிய மக்களுக்கும் அதிகார பங்களிப்பு வேண்டும். உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமிய மக்களுக்கு ஒரு இடம் கூட பா.ஜ.க கொடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் கல்வியை அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கல்வி கடன் என பல திட்டத்தை செய்தோம். 

நாடு முழுவதும் மோடிக்கு பெரும் எதிர்ப்பு இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மோடி ரூ. 15 லட்சம் தனி நபருக்கு கொடுக்கப்படும் என கூறினார், ஆனால் இன்னும் அதை செய்யவில்லை. கருப்பு பணமும் மீட்கவில்லை. 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என தேர்தல் வாக்குறுதி அளித்தார் ஆனால் அதையும் செய்யவில்லை. .ஜ.க வுக்கு ஆர்.எஸ்.எஸ் தான் மூலமாக இருந்து செயல்படுகிறது” என கூறினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP