அத்திவரதரை தரிசித்த சில நிமிடங்களில் பிறந்த ஆண் குழந்தை!

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்து விட்டு வெளியே வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு சில நிமிடங்களில் ஆண் குழந்தை பிறந்தது.
 | 

அத்திவரதரை தரிசித்த சில நிமிடங்களில் பிறந்த ஆண் குழந்தை!

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்து விட்டு வெளியே வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு சில நிமிடங்களில் ஆண் குழந்தை பிறந்தது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. நீரில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து 48 நாள்களுக்குப் பக்தர்களுக்கு அருள்புரிவதால், பெருமாளை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில் இன்று காலை அத்திவரதரை தரிசித்துவிட்டு வெளியே வந்த விஜயா என்ற பெண்ணுக்கு சில நிமிடங்களிலேயே பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக கோவில் அருகே உள்ள மருத்துவ முகாமிற்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவசர ஊர்தி மருத்துவ உதவியாளர் கௌதம், செவிலியர் யோகவள்ளி உதவியுடன் பிரசவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பிரசவத்தில் 3 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தை பிறந்தது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP