கலைஞர் அருகில் என்னையும் புதைக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்: மு.க.ஸ்டாலின்

மெரினாவில் தி.மு.க தலைவர் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய இடம் கிடைக்கவில்லை எனில் அவருக்கு அருகே என்னை புதைத்துவிடுங்கள் என்று கூறியதாக மு.க.ஸ்டாலின தெரவித்தார்.
 | 

கலைஞர் அருகில் என்னையும் புதைக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்: மு.க.ஸ்டாலின்

மெரினாவில் தி.மு.க தலைவர் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய இடம் கிடைக்கவில்லை எனில் அவருக்கு அருகே என்னை புதைத்துவிடுங்கள் என்று கூறியதாக மு.க.ஸ்டாலின தெரவித்தார். 

தி.மு.க தலைவர் மு.கருணாநிதி கடந்த 7ம் தேதி காலமானார். அவரை மெரினாவில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கோரிக்கை விடுத்தார். பின்னர், சில சட்ட சிக்கல்கள் இருப்பதால் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க முடியாது என்று முதல்வர் கூறியதாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை வெளியிட்டார். 

பின், தி.மு.க நீதிமன்றத்தை நாடியது. அன்றைய தினம் நள்ளிரவிலும், அடுத்த நாள் காலையிலும் நடந்த விசாரணைக்கு பிறகு கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த செய்தியை கேட்டு, ராஜாஜி அரங்கில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்து வந்த தொண்டர்கள் வெற்றி கோஷம் எழுப்பினர். தீர்ப்பு செய்து அறிந்து , ஆயிரக்கணக்காக தொண்டர்களுக்கு முன் ஸ்டாலின் கண்ணீர் விட்டு அழுதார். 

இந்நிலையில் இன்று நடைபெற்ற தி.மு.க செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்து அக்கட்சியின்  செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது, "கருணாநிதி மறைந்த உடன் மெரினாவில் இடம் அளிக்க கோரி முதல்வருக்கு கடிதம் எழுதினேன். பின்னர் நேரில் சென்று கையை பிடித்து கெஞ்சினேன். ஆனால் முதல்வர் பார்ப்போம் என்று மட்டும் கூறினார். இந்த விஷயத்தில் நானே நேரில் சென்று பேச வேண்டிய அவசியம் இல்லை என்று மூத்தவர்கள் கூறினர். ஆனால் கருணாநிதிக்காக நான் செல்வேன் என்று கூறினேன். 

ஒருவேளை தீர்ப்பு  நமக்கு சாதகமாக வராவிட்டால், கலைஞரின் உடல் அருகில் தான் என்னுடைய உடலை புதைக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். தற்போது அதற்கு வாய்ப்பு கிடைக்காமல்போய்விட்டது" என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP